உலக சுகாதார நிறுவனம் என்பது என்ன?!

கொரோனாவுக்கு பிறகு உலக சுகாதார நிறுவனம் என்பது அனைவரும்; உச்சரிக்கும் பெயராகிவிட்டது. எதற்காக இதற்கு இத்தனை அதிகாரம், இத்தனை முக்கியத்துவம்?ஐநாவின் ஓர் அங்கமாக World Health Organisation(WHO) என்கிற உலக சுகாதார நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம் சர்வதேச அளவில் பொது சுகாதாரத்துக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை செய்யும் அதிகாரம் படைத்ததாக உள்ளது.எப்போது தொடங்கப்பட்டது?கடந்த 1948-ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் WHO; தொடங்கப்பட்டது. உலகில் உள்ள அனைவருக்கும் இயன்றவரை சிறந்த சுகாதார வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். எந்த நாட்டில் சுகாதார பிரச்னைகள் தலை தூக்கினாலும் இது தாமாகவே தலையிட்டு அதற்கான தீர்வையும் அளிக்கிறது.WHO உறுப்பினர்கள் யார்?மருத்துவரீதியான கல்வித்தகுதி கொண்டவர்களே இதன் உறுப்பினர்களாக உள்ளனர். தலைமை அலுவலகமான ஜெனீவாவில் இதுபோல் தகுதிவாய்ந்த 34 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் 3 ஆண்டுகளுக்கொரு முறை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.நோக்கம் என்ன?தொற்றுநோய்கள் போன்ற நோய்நொடிகளைத் தீர்க்க போராடுவது மற்றும் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் பொது சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தருவதை தனது முக்கிய வேலைத்திட்டமாக WHO வைத்திருக்கிறது. முக்கிய சாதனைகள்எச்.ஐ.வியினால் இறக்கக் கூடிய 15 முதல் 24 வயதினரை 50 சதவிகிதமாக உலக சுகாதார நிறுவனம் குறைத்துள்ளது. மேலும் 90% குழந்தைகளுக்கு புதிய எச்.ஐ.வி தொற்றுக்கள் பரவாமலும் தடுத்துள்ளது. எச்.ஐ.வி தொடர்பான இறப்புகளை 25% குறைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. உலகளாவிய மலேரியா நோய்த்தடுப்புக்கு வலுவான பிரச்சாரங்களை WHO மேற்கொண்டது. இதன்மூலம் நோய் பரவாமல் எண்ணற்ற கர்ப்பிணிகள் மற்றும் இளம் குழந்தைகளின் உயிர் காக்கப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் உதவியால் காசநோயானது 40% வீழ்ச்சி அடைந்தது. இந்த அமைப்பு பரிந்துரைத்த நடைமுறைகளின்படி, உலக அளவில் 7 மில்லியன் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.1988-ம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பானது போலியோ ஒழிப்பதற்கான உலகளாவிய போலியோ ஒழிப்பு முயற்சியை ஆரம்பித்தது. ரோட்டரி இன்டர்நேஷனல், டிசீஸ் கண்ட்ரோல் மற்றும் தடுப்பு மற்றும் ஐ.நா. சிறுவர் நிதியம் சிறுநிறுவனங்களுடன் இணைந்து 99% போலியோவைக் குறைத்துள்ளது.சர்ச்சைஇத்தனை நல்ல அம்சங்கள் கொண்ட உலக சுகாதார நிறுவனம் சர்ச்சைகளிலும் அவ்வப்போது சிக்குவது வழக்கம். குறிப்பாக கொரோனா பெருந்தொற்று விஷயத்தில் இதன் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை என்ற குற்றச்சாட்டை பலரும் முன் வைக்கின்றனர். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பும், கொரோனா குறித்த எச்சரிக்கையை முன்கூட்டியே உலகுக்கு அறிவிக்க தவறிவிட்டது WHO என்று பகிரங்கமாக அறிவித்தார். கொரோனாவின் தோற்றம் பற்றிய ஆய்வுகளிலும் இன்னும் தெளிவான முடிவை உலக சுகாதார நிறுவனம் எடுக்கவில்லை.

Related posts

இதயத்தைக் காக்கும் சைக்கிளிங்!

ப்ளுபெர்ரி பழத்தின் நன்மைகள்!

மன அழுத்தம் நீங்க சில எளிய வழிகள்!