உலக சாம்பியனை வீழ்த்திய சென்னை இளம் வீரர்: தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவரை தோற்கடித்து அசத்தல்

சென்னை: சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா உலக சாம்பியன் மெக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து அசத்தியுள்ளார். ஏர்திங்ஸ் என்ற ஆன்லைன் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயதான பிரக்ஞானந்தா பங்கேற்றுள்ளார். இவர் 8ஆவது சுற்றில் உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மெக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களில் நன்றாக நகர்த்தல்களை மேற்கொண்டார். டார்ஸ்ச்  வகை கேமை பயன்படுத்திய பிரக்ஞானந்தா வெறும் 39 நகர்த்தலில் உலகின் நம்பர் ஒன் வீரரான மெக்னஸ் கார்ல்செனை வீழ்த்தி அசத்தினார். சர்வதேச செஸ் போட்டியில் கார்ல்செனை பிரக்ஞானந்தா வீழ்த்துவது இதுவே முதல் முறை. ரேபிட் செஸ் முறையில் நடைபெற்ற இந்த தொடரில் தொடர்ந்து 3 போட்டிகளில் கார்ல்செனே வெற்றி பெற்றிருந்தார். இதனால் அவர்தான் சாம்பியன் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், இளம்வீரர் ஒருவர் அவரை வீழ்த்தியிருப்பது சர்வதேச அளவில் செஸ் பிரியர்களுக்கு இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் தொடர்ந்து 3 முறை போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த பிரக்ஞானந்தா இந்த வெற்றியின் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளார். இந்த தொடரில் அவர் 8 புள்ளிகளுடன் 12வது இடத்தில் உள்ளார். …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்