உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

கூடலூர், டிச. 8: காமயகவுண்டன்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து நடத்திய உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.பேரூராட்சி மன்ற தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஆறுமுக நயினார், துணைத்தலைவர் கஸ்தூரி பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் உலக எய்ட்ஸ் தினத்தைப் பற்றியும், இந்நாளில் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பற்றியும் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்தவ அலுவலர் சிராஜுதீன் பேசினார்.

மேலும், தமிழ்நாடு அரசு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் செயல்பாடுகள், ஹெச்ஐவி நோயாளிகளின் பராமரிப்பு வழிமுறைகள் குறித்தும் விளக்கினார். பின்னர் அனைவரும் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் அப்பகுதிகளில் உள்ள ஆட்டோக்களில் ஒட்டப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர் முரளி, ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மைய ஆலோசகர் மாலதி, ஆரோக்கிய அகம் இந்திராணி, பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை