உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தஞ்சாவூர், ஏப்.3:உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நேற்று தஞ்சாவூரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுதோறும் ஏப்ரல் 2ம் தேதி உலக ஆட்டிசம் நாளாக அனுசரிக்கப்படுகிறது. 2017ம் ஆண்டு முதல் ஏப்ரல் 2ம் தேதி உலக மதியிறுக்க விழிப்புணர்வு தினமாக கொண்டாட வேண்டும் என WHO அறிவித்துள்ளது. அதில் மனவளர்ச்சி உடைய மாணவர்களுக்கு என தனியாக பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அதில் பல்வேறு மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியாகுல்ஹக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கை ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் இந்திய குழந்தைகள் நலச்சங்க துணை தலைவர் மருத்துவர் சிங்காரவேல், தஞ்சாவூர் மாவட்ட தலைவர் லெனின் சந்திரசேகரன், மாநில உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார், தஞ்சாவூர் செயலாளர் மருத்துவர் எழிலன், மருத்துவர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மனவளர்ச்சி உள்ள குழந்தைகளிடம் பெற்றோர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் வெறுப்புகளை காட்டக்கூடாது என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஏராளமான குழந்தைகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி