உலக அளவில் 3வது நாடு இந்தியா: கொரோனா பலி 3 லட்சம்

புதுடெல்லி: அமெரிக்கா, பிரேசிலுக்கு பிறகு உலக அளவில் இந்தியாவில் கொரோனா பலி 3 லட்சத்தை தாண்டி உள்ளது.இந்தியாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்பு குறைந்தாலும், பலி எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. கடந்த  24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று  காலை 8 மணிக்கு வெளியிட்டது. அதில், நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 315 பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகி  உள்ளனர். தொடர்ந்து 17 வது நாளாக தினசரி தொற்று விகிதம் சரிவை நோக்கி உள்ளது.மொத்த பாதிப்பு 2 கோடியே 67 லட்சத்து 52 ஆயிரத்து 447 ஆக பதிவாகி உள்ளது. பாதிப்பு குறைந்தாலும் தினசரி பலி நேற்றும் 4  ஆயிரத்துக்கும் அதிகமாகவே பதிவானது. கடந்த 24 மணி நேரத்தில் 4,454 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த பலி 3 லட்சத்தை  தாண்டியது. இதுவரை கொரோனாவுக்கு இந்தியாவில் 3 லட்சத்து 3,720 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்கா (5 லட்சத்து 89 ஆயிரத்து  893), பிரேசிலுக்கு (4 லட்சத்து 49 ஆயிரத்து 68) பிறகு இந்தியா தான் கொரோனா பலி 3 லட்சத்தை எட்டி உள்ளது. சிகிச்சை பெறுவோர்  எண்ணிக்கை 27 லட்சத்து 20 ஆயிரத்து 716 ஆக சரிந்துள்ளது.”கடந்த 12 நாளில் 50,000 பேர் மரணம்கடந்த 12 நாளில் மட்டும் 50,000 பேர் இறந்துள்ளனர். அதே போல கடந்த 26 நாளில் 1 லட்சம் பேர் இறந்துள்ளனர். அமெரிக்காவில்  கொரோனா உச்சத்தில் இருந்த போது அதிகபட்சமாக 31 நாளில் 1 லட்சம் பேர் இறந்தனர். அதை விட இந்தியாவில் பலி அதிகளவில்  உள்ளது. …

Related posts

ரூ.100 கோடி வரை தொழில் திட்டத்திற்கு அடமானமின்றி சுய நிதி உத்தரவாதம்: ஒன்றிய நிதியமைச்சர் பேச்சு

அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸ் இல்லை இந்தியாவை சேர்ந்த வசுலூன்: ம.பி. கல்வி அமைச்சர் பேச்சு

பெண் டாக்டர் பலாத்கார கொலை விவகாரம்; முதல்வர் மம்தாவுடன் பேச்சுவார்த்தையை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்: போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் கடிதம்