உலக அளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49.91 கோடியாக உயர்வு..!

வாஷிங்டன் : உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52.87 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52.87 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52,87,79,254 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 49,91,65,111 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2,33,10,727 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 63,03,416 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகள்:அமெரிக்கா – பாதிப்பு – 8,52,41,016, உயிரிழப்பு – 10,29,524, குணமடைந்தோர் – 8,17,64,911 இந்தியா – பாதிப்பு – 4,31,41,200, உயிரிழப்பு – 5,24,490, குணமடைந்தோர் – 4,26,00,737 பிரேசில் – பாதிப்பு – 3,08,36,815, உயிரிழப்பு – 6,65,955, குணமடைந்தோர் – 2,98,85,580 பிரான்ஸ் – பாதிப்பு – 2,93,91,365, உயிரிழப்பு – 1,48,005, குணமடைந்தோர் – 2,86,57,773 ஜெர்மனி – பாதிப்பு – 2,61,57,826, உயிரிழப்பு – 1,38,879, குணமடைந்தோர் – 2,48,32,300 …

Related posts

நஸ்ரல்லாவுக்கு பின் தலைவர் பதவியை ஏற்க இருந்த ஹஷேம் சபேதீன் இஸ்ரேல் குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தலைவர் பலி: லெபனானில் பதற்றம்

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு