Saturday, October 5, 2024
Home » உலகை ஆளப் போகும் கடவுளின் கனி

உலகை ஆளப் போகும் கடவுளின் கனி

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்* Monk fruitஇயற்கை படைத்த ஒவ்வொரு இலை, பூ, காய், கனி என அனைத்திலும் நம் மனித வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்கள் இருக்கின்றன. அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என ஒரு சிலவற்றைப் பற்றி மனித குலம் அறிந்திருக்கிறது.இன்னும் பலவற்றின் பயன்பாடுகள் நமக்குத் தெரியாமல் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், ஒவ்வொன்றிலும் இயற்கை தன் ரகசியத்தை ஒளித்து வைத்திருக்கிறது. அப்படி இயற்கையால் நமக்குக் கிடைத்த வரம், இதுவரை நாம் அறிந்திடாததாக இருந்தாலும் இனி மேல் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றுதான் Monk Fruit.* மாங்க் ஃப்ரூட்டை நன்கு காய வைத்து அதிலிருந்து ஒரு வகை ஸ்வீட்னர் தயாரிக்கிறார்கள். ஏனெனில், கரும்பு சர்க்கரையை விட 150-லிருந்து 250 மடங்கு அதிகமான இனிப்பை அளிக்கக் கூடியதாக இப்பழம் இருக்கிறது.* காஃபி, டீ, சாலட், சாஸஸ், ஓட்ஸ் சேர்த்த உணவுகள், யோகர்ட் போன்றவற்றுடன் சேர்த்து மாங்க் ஃப்ரூட்டின் ஸ்வீட்னரை சேர்த்து சாப்பிடலாம். *மாங்க் ஃப்ரூட் பழத்தை ஃப்ரெஷ்ஷாக அப்படியே சாப்பிடலாம். ஆனாலும், இந்தியாவில் பல இடங்களிலும் உலர்ந்த பழமாகவே கிடைக்கிறது.* கலோரியும் கார்போஹைட்ரேட்டும் மற்றும் கொழுப்பும் சதவிகித அளவில் பூஜ்யம் என்பதால் எடை குறைப்பில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு நல்ல சாய்ஸ். அதனால் தினசரி நீங்கள் பயன்படுத்தும் சர்க்கரைக்குப் பதிலாக மாங்க் ஃப்ரூட் ஸ்வீட்னரை பயன்படுத்தினால் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ளலாம்.*; மாங்க் ஃப்ரூட்டின் அறிவியல் பெயர் Siraitia grosvenorii. இதன் சீனப்பெயர் லுயோ ஹான் க்யோ (Luo han guo).* மாங்க் ஃப்ரூட்டினை முதன் முதலில் விளைவித்தவர்கள் சீனாவைச் சேர்ந்த துறவிகள் என்கிறார்கள். இதுதான் மாங்க் ஃப்ரூட்டின் பெயருக்கான மூல காரணம். இது ‘புத்தரின் கனி’ எனவும், சில இடங்களில் ‘கடவுளின் கனி’ எனவும் அழைக்கப்படுகிறது. * பெரும்பாலும் தெற்கு சீனாவிலும் வடக்கு தாய்லாந்தின் சில பகுதிகளிலும் விளையக் கூடியது மாங்க் ஃப்ரூட். பச்சை நிறத்தில் இருந்தாலும் நம்மூர் கிர்ணி பழம் போன்ற ஒரு வகையான பழம்தான் மாங்க் ஃப்ரூட். * பெரும்பாலும் காய்களே பச்சை நிறத்தில் இருக்கும். பழங்களாக கனிந்த பிறகு நிறம் மாறிவிடும். ஆனால், மாங்க் ஃப்ரூட் பச்சை நிறத்திலேயே இருக்கும். உலர்ந்தவுடன் ப்ரௌன் நிறத்தில் மாறிவிடும்.* தற்போது ஆரோக்கியத்தை விரும்புகிறவர்களின் உணவுப்பட்டியலில் மாங்க் ஃப்ரூட் முக்கிய இடத்தைப் பெற்று வருகிறது. * சமீபத்தில் மாங்க் ஃப்ரூட்டை இந்தியாவில் விளைவிக்க ஆராய்ச்சியாளர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். முதன்முறையாக இமயமலை சார்ந்த சில பிரதேசங்களில் மட்டும் மாங்க் ஃப்ரூட் பயிர் செய்யப்பட்டிருக்கிறது. * மாங்க் ஃப்ரூட் மரத்தை வளர்ப்பது சிரமம். பொருளாதார ரீதியாக அதிகம் செலவு தேவைப்படும் ஒரு விஷயமும் கூட. அதனால் இந்த ஸ்வீட்னர் மற்ற ஸ்வீட்னர்களை விட சற்று கூடுதல் விலையில்தான் கிடைக்கும். எனவே, நம் உள்ளூர் சந்தையில் ஃப்ெரஷ்ஷாக கிடைப்பது சிரமம். * நீரிழிவும், உடல்பருமனும் மிகப்பெரிய சர்வதேச பிரச்னையாக உருமாறிக் கொண்டிருக்கும் நிலையில் மாங்க் ஃப்ரூட்டுக்கு சர்வதேச சந்தையில் மிக முக்கியமான இடம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.* அநேக ஊட்டச்சத்து நிறைந்த இனிப்புகள் குடல் பாக்டீரியா மற்றும் குடலின் உட்பொருளை பாதிக்கும் என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதனால் சர்க்கரைக்குப் பதிலாக இந்த ஸ்வீட்னரை தொடர்ந்து பயன்படுத்த நினைப்பவர்கள் பயன்படுத்தும் முன்பு மருத்துவ ஆலோசனை மேற்கொள்வது சிறந்தது. * மாங்க் ஃப்ரூட்டின் பல்வேறு நன்மைகள் குறித்தான ஆராய்ச்சிகள் இன்னும் முழுமை அடையவில்லை என்றே சொல்ல வேண்டும். * வயிற்றுவலி, வாந்தி, நாக்கு தடித்துப் போதல், மூச்சிரைப்பு, மயக்கம், படை போன்ற பலவிதமான அலர்ஜியை ஏற்படுத்தலாம். * மாங்க் ப்ரூட் ஸ்வீட்னரை கொண்டு பலவிதமான ரெசிபிகளை செய்து சாப்பிடலாம். பேக் பண்ணி விற்பதற்கும் மாங்க் ஃப்ரூட்டுகள் பாதுகாப்பானவை.* மாங்க் ஃப்ரூட் இந்தியாவில் விளைவிக்கப்படுவதில்லை. ஆதலால் ஃப்ெரஷ்ஷான பழம் நமக்கு கிடைக்க அதிகம் வாய்ப்பில்லை. ஆசிய சந்தையில் சில இடங்களில் இறக்குமதி செய்யப்பட்ட உலர்ந்த மாங்க் ஃப்ரூட் கிடைக்கும். * ‘மாங்க் ஃப்ரூட் உடலுக்குப் பாதுகாப்பானது. இதனை கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் அனைவரும் சாப்பிடலாம்’ என்று FDA தெரிவித்துள்ளது. * மாங்க் ஃப்ரூட் அழற்சிகளை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது எனவும் இந்த ஸ்வீட்னர் புற்றுநோயைத் தடுக்கவும் சர்க்கரை அளவை நிலையாக வைத்திருக்கவும் உதவுகிறது என 2011-ல் நடந்த ஆராய்ச்சி ஒன்றில் தெரிய வந்துள்ளது. இதனால் சில ஹாட் டிரிங்ஸ் வகைகளையும் இந்த ஸ்வீட்னரை பயன்படுத்தித் தயாரிக்கிறார்கள். * சர்க்கரை நோயாளிகள் அதிகம் விரும்பும் பழமாக மாங்க் ஃப்ரூட் உருவாகி வருகிறது. காரணம், ரத்தத்தின் சர்க்கரை அளவை இது அதிகப்படுத்துவதில்லை. இதில் கலோரியும் கார்போஹைட்ரேட்டும் சதவிகித அளவில் பூஜ்யம் என்பதால் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்காது.* இருமல் மற்றும் தொண்டைப்புண்ணை சரி செய்ய பயன்படுகிறது. பெரும்பாலும் இது மூலிகை டீ அல்லது சூப் செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. * மாங்க் ஃப்ரூட்டில் கார்போஹைட்ரேட்டும், கலோரியும் இருக்காது என்றாலும், அதிலிருந்து தயாரிக்கப்படும் தின்பண்டங்களில் சர்க்கரையும், கார்போஹைட்ரேட்டும் இருக்காது என்று நினைப்பது தவறு. இந்த தின்பண்டங்களின் தயாரிப்பின்போது மாங்க் ப்ரூட்டின் இனிப்புடன் செயற்கையாக வெள்ளை சர்க்கரையையும் சேர்ப்பார்கள். * குளிர்பானங்களிலும் இதன் ஸ்வீட்னர் முக்கியமாக உபயோகப்படுத்தப்படுகிறது.* சாக்ரீன் போன்ற மற்ற ஸ்வீட்னர்களை காட்டிலும் இனிப்பானதாகவும் கசப்பு குறைவாகவும் உடையது மாங்க் ஃப்ரூட் ஸ்வீட்னர். * சீனாவின் பாரம்பரிய மருத்துவமுறைகளில் இப்பழம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரிய சீன வைத்திய முறைகள் இதன் சிறந்த; ஆேராக்கிய பலன்களை காலம் காலமாக மக்களுக்கு உணர்த்தி வருகின்றன.* புடலங்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் போன்ற வகையினை சேர்ந்த பழம் என்பதால் இது மிகமிக அரிதாக ஒரு சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம்.*; சில ஸ்வீட்னர்களை உட்கொள்ளும்போது அலர்ஜி, வீக்கம், வாயுத்தொல்லை போன்ற பின் விளைவுகள் இருக்கும். மாங்க் ஃப்ரூட் ஸ்வீட்னரில் பின் விளைவுகள் எதுவும் இருக்காது. பலரும் இன்று மாங்க் ஃப்ரூட்டை விரும்ப இது முக்கிய காரணம். தொகுப்பு: சக்தி

You may also like

Leave a Comment

fourteen + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi