உலகில் கொரோனாவால் 41.57 கோடி பேர் பாதிப்பு : ஒரே நாளில் 1,891,846 பேருக்கு தொற்று பாதிப்பு!

ஜெனீவா :உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41.57 கோடியாக அதிகரித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 57 லட்சத்து 69 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 14 லட்சத்து 69 ஆயிரத்து 308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 33 கோடியே 84 லட்சத்து 45 ஆயிரத்து 9 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 58 லட்சத்து 55 ஆயிரத்து 235 பேர் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்காவில் ஒரே நாளில் 87,934 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் 79,622,180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 50,405,867 பேர் மீண்டுள்ளனர். 28,267,526 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 42,721,845 பேராக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 509,388 பேராகும். பிரேசில் நாட்டில் மொத்தம் 27,664,958 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பிரேசிலில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 24,252,534 ஆகும். …

Related posts

இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்

அமெரிக்க அதிபர் தேர்தல்; கமலா ஹாரிசுக்கு பெருகும் ஆதரவு

பாரீஸ் ஒலிம்பிக்: 28 பேர் கொண்ட இந்திய தடகள அணி வீரர்கள் பட்டியல் அறிவிப்பு..!!