உலகில் கொரோனாவால் 31.39 கோடி பேர் பாதிப்பு : ஒரே நாளில் 27 லட்சம் பேருக்கு தொற்று!

வாஷிங்டன்,சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 கோடியே 38 லட்சத்து 59 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 67 லட்சத்து 24 ஆயிரத்து 893 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 26 கோடியே 16 லட்சத்து 14 ஆயிரத்து 196 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 55 லட்சத்து 20 ஆயிரத்து 604 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அமெரிக்கா-.29 லட்சம்,  பிரான்ஸ் – 3.68 லட்சம், இத்தாலி – 2.20 லட்சம், இந்தியா – 1.85 லட்சம், ஸ்பெயின் – 1.35 லட்சம், அர்ஜென்டினா – 1.34 லட்சம்,  பிரிட்டன் – 1.20 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். …

Related posts

நஸ்ரல்லாவுக்கு பின் தலைவர் பதவியை ஏற்க இருந்த ஹஷேம் சபேதீன் இஸ்ரேல் குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தலைவர் பலி: லெபனானில் பதற்றம்

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு