Saturday, June 29, 2024
Home » உலகின் பல நாடுகளை சேர்ந்த பாரம்பரிய மருத்துவர்கள் முகாமிடும் கர்நாடக மாநிலத்தின் தென்னை களஞ்சியம் துமகூரு

உலகின் பல நாடுகளை சேர்ந்த பாரம்பரிய மருத்துவர்கள் முகாமிடும் கர்நாடக மாநிலத்தின் தென்னை களஞ்சியம் துமகூரு

by kannappan

* முழுக்க முழுக்க திராவிட கலையில் கட்டப்பட்ட சித்தலிங்கேஷ்வரசுவாமி கோயில்* கம்பீரமாக காட்சி அளிக்கும் மசூதி கோபுரம் * மலைகளின் அரசி மதுகிரிகர்நாடக மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனி தனி சிறப்புகள் உள்ளது. அந்த வகையில் ஆன்மிக திருத்தலங்கள் நிறைந்தும், இயற்கை  வளம் கொஞ்சியும், மாநிலத்திற்கு தேவையான ேதங்காய் கொடுக்கும் தென்னை களஞ்சியமாக துமகூரு மாவட்டம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள்  பழமையான சித்தகங்கா மடம், கொரவனஹள்ளி மகாலட்சுமி கோயில், எடியூர் சித்தலிங்கேஷ்வரசுவாமி கோயில், கேத்தசந்திரா புகழ் தட்டை இட்லி  என பல பெருமைகளை துமகூரு மாவட்டம் கொண்டுள்ளது.மன்னராட்சி காலத்தில் சித்ரதுர்கா பகுதியை ஆட்சி செய்த மதுகிரி நாயக்கர் வம்சத்தினரின் ஆளுகையில் துமகூரு பகுதி இருந்தது. கடந்த 1832ம்  ஆண்டு பிரிட்டீஸ் கமிஷனராக இருந்த மார்க் கப்பன், சித்ரதுர்காவில் இருந்து துமகூருவை தனிமைப்படுத்தினார். அப்பகுதியின் முதல் கலெக்டராக  ஜெனரல் ரிச்சர்ட் ஸ்டார்ட் கடந்த 1835-1861 வரை இருந்தார். பிரிட்டீஸ் ஆட்சிக்கு முன் கங்க பேரரசர்கள், சாளுக்கிய மன்னர்கள், ராஷ்ட்ரகுட்டர்கள்,  நலம்பர்கள், சோழமன்னர்கள், உடையார் மன்னர்கள் ஆட்சி நடத்தியுள்ளனர்.ஒவ்வொரு மன்னர்கள் ஆட்சி காலத்திலும் கோயில்கள் எழுப்பியும் குளங்கள் வெட்டியும் விவசாயத்திற்கும் ஆன்மிகத்திற்கும் முன்னுரிமை  கொடுத்துள்ளனர். துமகூரு நகரில் உள்ள சித்தகங்கா மடம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இம்மடத்தின் சார்பில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகளுக்கு உணவுடன் இலவச கல்வி வழங்கப்படுகிறது. நாட்டில் பதவியில் இருந்த குடியரசு தலைவர், பிரதமராக இருந்தவர்களின்  பாதம் படாதவர்கள் யாரும் மடத்தில் கிடையாது. ஆன்மிகத்துடன் கல்விக்கு முக்கியத்துவம் ெகாடுக்கப்பட்டு வருகிறது.மூலிகை சாம்ராஜ்ஜியம்: பெங்களூரு-மதுகிரி சாலையில் சித்தபெட்டா என்ற மலை உள்ளது. கண்ணோக்கி பார்க்கும் இடமெல்லாமல் பசுமையாக  காட்சி தரும் மலையில் இருக்கும் ஒவ்வொரு செடி, கொடியும் மருத்துவ குணம் கொண்ட மூலிகையாக இருப்பதால் இந்தியா மட்டுமில்லாமல்  உலகின் பல நாடுகளை சேர்ந்த பாரம்பரிய மருத்துவர்கள் சித்தபெட்டாவில் முகாமிட்டுள்ளனர்.ஆலோபதி சிகிச்சை முறையில் தீர்க்க முடியாத பல  நோய்களை முழுமையாக குணமாக்கும் தன்மைகள் கொண்ட மூலிகைகள் செடிகள் குவிந்துள்ளது. இந்த மலையில் நூற்றுக்கும் மேற்பட்ட சித்தர்கள்  வாழ்ந்து வந்ததாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மூலிகை சாம்ராஜ்ஜியமாக இருப்பதால் தினமும் சுற்றுலா பயணிகள் வந்து  செல்கிறார்கள்.தென்னை களஞ்சியம்: துமகூரு மாவட்டம் என்றதும் தென்னை மரங்கள் தான் நினைவுக்கு வரும். மாவட்டத்தின் திப்டூர் தாலுகா விவசாயிகள்  தென்னை சாகுபடியில் நாட்டில் முதலிடத்தில் உள்ளனர். விண்ணை தொடும் உயரத்தில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வளர்ந்துள்ளது. இதன்  இப்பகுதியை கல்பத்தரு நாடு (தென்னை களஞ்சிய நாடு) என்று பெருமையுடன் அழைக்கிறார்கள். தென்னை மரத்தின் அனைத்து பயன்படுகளையும்  விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள். கர்நாடக மாநிலம் மட்டுமில்லாமல் நாட்டின் பல மாநிலங்களுக்கு இங்கிருந்து தேங்காய், ேதங்காய்  பயன்படுத்தி தயாரிக்கப்படும் எண்ணை உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.ஜும்மா மசூதி: மாவட்டத்தின் சிரா பகுதியை ரங்கப்பா நாயக் ஆட்சி செய்து வந்தார். அப்பகுதியில் இந்து, இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழ்வதால், இரு  கலாச்சாரமும் குடும்ப பாசமும் நிறைந்துள்ளது. விஜயபுராவை தலைமையிடமாக ெகாண்டு ஆட்சி நடத்திய அவுரங்கசீப் ஆட்சி காலத்தில் சிராவில்  சாரசினிக் சிற்பகலை தொழில்நுட்பத்தில் ஜும்மா மசூதி கட்டியுள்ளார். அறை நூற்றாண்டுக்கு முன் கட்டிய மசூதியின் கோபுரம் இன்றளவும் கம்பீரமாக  காட்சி தருகிறது. இதை காண சாதி, மதம், மொழி பேதமில்லாமல் சுற்றுலாபயணிகள் வந்து செல்கிறார்கள். மசூதி இஸ்லாமியர்களின் வழிபாட்டு  தலமாக இருந்தாலும் மசூதியின் கலை வேலைப்பாடுகள் அனைத்தும் இந்து கலாச்சாரத்தில் அமைந்துள்ளது விசேஷமாகும்.சோமநாதர் கோயில்: மாவட்டத்தின் துருவகெரே பகுதியில் கடந்த 13ம் நூற்றாண்டில் பனசந்திரா பகுதியில் அக்ரஹாரம் அமைந்துள்ளது. 100 சதவீதம்  பிராமணர்கள் வாழும் பகுதியில் முழுக்க முழுக்க பழமையான கலாச்சாரம் 700 ஆண்டுகள் கடந்தும் உள்ளது. ஹொய்சள மன்னர்கள் ஆட்சி காலத்தில்  பல கோயில்கள் கட்டி இருந்தாலும் மகாதண்டநாயக் சோமண்ணா ஆட்சி காலத்தில் கலைநுட்பத்துடன் கட்டியுள்ள சோமநாதபுரா கோயில்  சிறப்பாகவுள்ளது. அதேபோல் கங்காதேஷ்வரன் கோயிலில் பிரதீஷ்டை செய்துள்ள சிவலிங்கம் சக்தியமாக உள்ளது. கோயில் கருவறை முதல்  அனைத்து தூண்களில் வடிவமைத்துள்ள சிற்பகலைகள் கண்ணை ஒத்தி கொள்ளும் வகையில் உள்ளது. கடந்த 1260ம் ஆண்டில் ஹொய்சள  மன்னர்களால் கட்டியுள்ள சங்கரேஷ்வர கோயில் இன்றும் கலை மாறாமல் உள்ளது.சித்தலிங்கேஷ்வரசுவாமி கோயில்: மாவட்டத்தில் எடியூர் தாலுகா வீரசைவ மடாதிபதிகள், கலாச்சாரங்கள் கொண்டுள்ளது. இங்குள்ள  சித்தலிங்கேஷ்வரசுவாமி கோயில் முழுக்க முழுக்க திராவிட கலையில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் ஆண்டு விழாவில் பிரமாண்ட தேர் ஊர்வலம்  நடக்கிறது. 6 கல் சக்கரங்கள் கொண்ட தேரில் உற்சவ மூர்த்தியாக சிவபெருமானை அமர்த்தி கொண்டுவருகிறார்கள். அசைந்தாடி வரும் தேரின்  அழகை காண கண்ேகாடி வேண்டும். வீரசைவ கலாச்சாரம் குறித்து யார் ஆய்வு செய்தாலும் இங்கு வருவார்கள்.தேவராயதுர்கா: துமகூரு மாவட்டத்திற்கு அழகு சேர்க்கும் இயற்கை கொஞ்சம் வன பகுதியாக தேவராயதுர்கா விளங்குகிறது. இந்த வனமலையில் பல  குகை கோயில்கள் உள்ளது. நரசிம்மவர்மன் காலத்தில் கட்டியுள்ள ேகாயில்கள் அனைத்தும் திராவிட கலையில் மின்னுகிறது. அதில் குறிப்பாக  சஞ்ஜீவராய ேகாயில் மிகவும் கலை நுட்பத்துடன் உள்ளது. அனுமான் கோயில், கும்பி நரசிம்மர் ேகாயில், நரசிம்மர் கோயில், பிரசாத தீர்த்தம்,  ராமர்-சீதை-லட்சுமணர் ேகாயில் உள்பட 50க்கும் மேற்பட்ட கோயில்கள் தேவராயதுர்காவில் உள்ளதால் அதை ஆன்மிக திருத்தலமாக  அழைக்கிறார்கள். வனப்பகுதியை ஒட்டி ஜெயமங்கலி என்ற நதி பாய்வது மலைக்கு கூடுதல் மெருகை தருகிறது. மலையின் எந்த பகுதியில் இருந்து  பார்த்தாலும் பசுமை போர்த்தியது போல் காட்சியளிக்கும் வகையில் இயற்கையில் கொடை உள்ளது.மதுகிரிமலை: மாவட்டத்தில் மதுகிரி புகழ் பெற்ற நகரமாக இருந்தாலும், நகரின் முக்கால் பகுதி மலைகள் நிறைந்துள்ளதால் இதை மலைகளின் அரசி  என்று அழைக்கிறரர்கள். விஜயநகர பேரரசர்கள் ஆட்சி காலத்தில் கட்டியுள்ள மல்லேஷ்வர மற்றும் வெங்கடேஷ்வரசுவாமி கோயில்கள் மிகவும் புகழ்  பெற்றதாகவும். கோயிலில் உள்ள தூண்கள் கலைநுட்பங்கள் கொண்டுள்ளது. மேலும் மதுகிரி மலையில் ஜெய்னய, அரசன, பிரதானர ஆகிய மூன்று  கிணறுகள் உள்ளது. கடந்த 1763ம் ஆண்டில் ஐதர்அலி ஆட்சி காலத்தில் கட்டியுள்ள இஸ்லாமிய வழிபாட்டு தலமும் சிறப்பு பெற்றுள்ளது.பாவகட பாம்புமலை: மாவட்டத்தில் அதிகம் வனப்பகுதியை ஒட்டியுள்ளது பாவகடா தாலுகா. நிலத்தடியில் இருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில்  ரத்னகிரி மலை உள்ளது. அதையொட்டி நெடுகல் மற்றும் ராயதுர்கா ஆகிய மலைகள் உள்ளது. மராத்தாஸ் சாம்ராஜ்ஜியம், ஐதர்அலி ஆகியோர் ஆட்சி  செய்திருந்த பகுதியில் விஜயநகர பேரரசர்கள் காலத்தில் கடந்த 1405ம் ஆண்டில் தனது தலைநகரமாகவே பயன்படுத்தி வந்தார். இங்குள்ள பாவகடா  மலையை பாம்புகள் மலை என்று பெருமையுடன் அழைக்கிறார்கள்.அரளகுப்பே கோயில்: துமகூரு நகரில் இருந்து 6 கி.மீட்டர் தூரத்தில் பனசந்திரா ரயில் நிலையம் ஒட்டி கங்கா-நலம்பா ஆட்சி காலத்தில் கல்லேஷ்வர  கோயில் கடந்த 9ம் நூற்றாண்டில் கட்டியுள்ளது. இக்கோயில் இசை அமைத்துள்ள 8 தூண்களில் தொட்டதும் ஒலி கேட்கிறது. இதை ரசிக்க  ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அதே பகுதியில் ஹொய்சள மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டியுள்ள சென்னகேசவ பெருமாள்  கோயில் உள்ளது. அதன் கர்பகுடியில் விஷ்ணு உள்ளது. மேலும் நான்கு கங்கையம்மன் கோயில்கள் உள்ளது.கொரவனஹள்ளி மகாலட்சுமி கோயில்: பெண்கள் வழிபடும் பெண் தெய்வங்களின் மகாலட்சுமி மிகவும் முக்கியமானவர். ஒவ்வொரு ஆண்டும்  ஆடிமாதம் வரும் வரலட்சுமி நோன்பு நாளில் மகாலட்சுமியை வழிபடுவார்கள். கர்நாடக மாநிலத்தில் துமகூரு மாவட்மட், துருவகெரே தாலுகா,  கொரவனஹள்ளி கிராமத்தில் மட்டுமே புகழ்பெற்ற மகாலட்சுமி கோயில் உள்ளது….

You may also like

Leave a Comment

5 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi