உலகின் நுரையீரலாக கருதப்படும் அமேசான் மழைக்காடுகளை காப்பாற்ற தரை, வான்வழி பயிற்சி மேற்கொண்டது பிரேசில் ராணுவம்..!!

பிரேசில்: அமேசான் மழைக்காடுகளை பாதுகாக்கும் வகையில் பிரேசில் ராணுவம் தரை மற்றும் வான்வழி பயிற்சிகளை மேற்கொண்டது. உலகின் நுரையீரலாக கருதப்படும் அமேசான் காடுகளின் 60 சதவீதம் பகுதி பிரேசில் நாட்டில் அமைந்துள்ளது. எஞ்சிய பகுதிகள் கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வடார், கயானா, பொலிவியா உள்ளிட்ட 8 நாடுகளில் அடங்கியுள்ளன. அமேசான் மழைக்காடுகளில் அழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு வேகமாக நடைபெற்று வருவதால் அதனை தடுக்க பிரேசில் ராணுவம் முயற்சி எடுத்தது. அதன் ஒருகட்டமாக அமேசான் காடுகளில் முகாம் அமைத்து அந்நாட்டு ராணுவம் பயிற்சி மேற்கொண்டது. துப்பாக்கி பயிற்சி, ஏவுகணை வீச்சு என பல்வேறு செய்முறைகள் செய்துகாட்டப்பட்டன. அமேசான் காடுகள் மீது போர் விமானங்கள் பறந்து பயிற்சியில் ஈடுபட்டன. வீரர்கள் பாராசூட் மூலம் குறிப்பிட்ட இலக்குகளில் தரை இறங்கி பயிற்சியில் ஈடுபட்டனர். பூமியின் நிலப்பரப்பில் 6 சதவீதத்தை கொண்டுள்ள அமேசான் காடுகள், பூவுலகின் தாவரங்கள், உயிரின வகைகளில் பாதியை கொண்டுள்ளன. 40,000 தாவர இனங்கள், 1300 பறவை இனங்கள், 25 லட்சம் பூச்சு இனங்கள் என மாபெரும் உயிரின பன்மை மையமாக அமேசான் காடுகள் திகழ்கின்றன. …

Related posts

கொலை முயற்சி நடந்த பென்சில்வேனியாவில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் பிரசாரம்: பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கும் பங்கேற்பு

பாலஸ்தீன தாக்குதல் ஓராண்டை எட்டிய நிலையில் காசா மசூதி மீது இஸ்ரேல் குண்டுவீச்சில் 26 பேர் பலி: பெய்ரூட்டிலும் வான்வழி தாக்குதல் தீவிரம்

நஸ்ரல்லாவுக்கு பின் தலைவர் பதவியை ஏற்க இருந்த ஹஷேம் சபேதீன் இஸ்ரேல் குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தலைவர் பலி: லெபனானில் பதற்றம்