உலகளவில் கொரோனாவால் 21,67,10,542 பேர் பாதிக்கப்பட்டுள்ளர்; 19,36,35,791 பேர் குணமடைந்துள்ளனர்: உலக சுகாதார நிறுவனம்

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45.06 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,506,800 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 216,710,542 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 193,635,791 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 113,348 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 220 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 கோடியே 67 லட்சத்து 10 ஆயிரத்து 542ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 85 லட்சத்து 67 ஆயிரத்து 951 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19 கோடியே 36 லட்சத்து 35 ஆயிரத்து 791 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 45 லட்சத்து 06 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்துள்ளனர்….

Related posts

தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில் திமுக அரசின் திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

பிரிட்டன் பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

இங்கிலாந்து தேர்தலில் ஈழ தமிழ் பெண் வெற்றி: உலக தமிழர்கள் பாராட்டு