உலகம் முழுவதும் 5 கோடி பேர் நவீன அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளனர்: ஐக்கிய நாடுகள் சபை கவலை

ஜெனிவா: உலகம் முழுவதும் 5 கோடி பேர் நவீன அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொழிலாளர்கள் நிலைமை குறித்து வெளியிட்ட அறிவிப்பில், ‘கடந்தாண்டு இறுதி வரை, 2.8 கோடி மக்கள் கட்டாயத் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்; 2.2 கோடி மக்கள் கட்டாயத் திருமணத்தில் வாழ்கின்றனர். அதாவது மேற்கண்ட நவீன அடிமைத்தனத்தில் கிட்டத்தட்ட 5 கோடி பேர் தள்ளப்பட்டுள்ளனர். வரும் 2030ம் ஆண்டிற்குள் அனைத்து வகையான நவீன அடிமைத்தனத்தையும் ஒழிக்க ஐக்கிய நாடுகள் சபை முக்கிய முடிவுகளையும், இலக்கையும் நிர்ணயித்து செயல்பட உள்ளது. கடந்த 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்தாண்டு மட்டும் நவீன அடிமைத்தனத்தின் எண்ணிக்கை 93 லட்சம் பேர் அளவிற்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றுநோய் பரவல் காலகட்டம், காலநிலை மாற்றம், புவிசார் அரசியல் மோதல்கள் காரணமாக அதிகளவில் நவீன அடிமைத்தனம் அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்தில் ஒருவர் கட்டாய உழைப்பில் தள்ளப்படுகிறார். மேலும் இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வணிகரீதியான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர்’ என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது….

Related posts

நஸ்ரல்லாவுக்கு பின் தலைவர் பதவியை ஏற்க இருந்த ஹஷேம் சபேதீன் இஸ்ரேல் குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தலைவர் பலி: லெபனானில் பதற்றம்

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு