உலகம் முழுவதும் ஓமிக்ரான் வகை புதிய கொரோனா வைரஸ், கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருவதாக அமெரிக்க மருத்துவ நிபுணர் கணிப்பு!!

வாஷிங்டன்:உலகம் முழுவதும் ஓமிக்ரான் வகை புதிய கொரோனா வைரஸ், கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருவதாக அமெரிக்க அதிபருக்கான மருத்துவ ஆலோசகர் அந்தோணி பவுசி தெரிவித்துள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிறிஸ்துமஸ் பண்டிகை கால விடுமுறையில் பணியிடங்களில் இருந்து வீட்டிற்கோ அல்லது கேளிக்கைக்காக வெளியிடங்களுக்கோ பயணம் மேற்கொள்பவர்களால் ஓமிக்ரான் வைரஸ் வேகமாக பரவக்கூடும் என்று எச்சரித்துள்ளார். ஓமிக்ரான் பாதிப்பின் வீரியத்தை குறைப்பதற்கான ஒரே வழி தடுப்பூசி போடாதவர்கள் அதனை போட்டுக் கொள்வதும் ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்களும் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்வதும் தான் என்றார் அவர். அத்துடன் முகக்கவசம் போன்ற கொரோனா தடுப்பு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பதுடன் கூட்டமான இடங்களை தவிர்ப்பதும் ஓமிக்ரான் பரவும் வேகத்தை குறைக்க உதவும் என்கிறார் அந்தோணி பவுசி. அமெரிக்காவில் தற்போது நிலையில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் இதுவரை 43 மாகாணங்களில் ஓமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுவிட்டது. அங்கு இம்மாத தொடக்கத்தில் இருந்ததை காட்டிலும் தற்போது கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் 50% அதிகரித்துவிட்டது. மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருப்பதும் 20% அதிகரித்துவிட்டது. இதனால் விளையாட்டுகள் பலவும் தள்ளிவைக்கப்பட்டன. கேளிக்கை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு குறித்தும் அதனை கட்டுப்படுத்துவதற்கான திட்டம் குறித்தும் அமெரிக்க அதிபர் ஜோபிடன் நாளை முக்கிய உரை நிகழ்த்த திட்டமிட்டுள்ளார்….

Related posts

வேலைக்காக இங்கிலாந்து சென்றவர் எம்பியாக தேர்வு: கன்சர்வேட்டிவ் எதிர்ப்பு அலையில் வென்ற கேரள செவிலியர்

இலங்கை அதிபர் தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு: ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டி

இலங்கையில் அரசு ஊழியருக்கு இந்தாண்டு சம்பள உயர்வு இல்லை: அதிபர் ரணில் விக்ரமசிங்கே தகவல்