உரிய ஆவணங்கள் சமர்ப்பித்ததால் பறிமுதல் செய்த ரூ3.17 கோடி திரும்ப ஒப்படைப்பு

ஸ்ரீபெரும்புதூர்: சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்வதை தடுக்க, தமிழகம் முழுவதும் பறக்கும் படை அமைக்கப்பட்டு, அதிகாரிகள் தீவிர வாகன தனிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில். ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாலமங்கலம் கூட்டுச்சாலையில் வேளாண் துறை உதவி அலுவலர் இந்துமதி தலைமையில் நேற்று மதியம்  பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி வேனை மடக்கி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்களின்றி எடுத்து ரூ3.17 கோடி இருந்தது. இதனையடுத்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்கு கொண்டு செல்லபட்டது என தெரியவந்தது. தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள், உரிய ஆவணங்களை கொண்டு வந்து சமர்ப்பித்தனர். அதன்பின்னர், பணத்துடன் அந்த வாகனமும் விடுவிக்கப்பட்டது. இதேபோல், குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், பெரியார் நகரில் காஞ்சிபுரம் தொழில் கூட்டுறவு அலுவலர் சக்திவேல் தலைமையிலான பறக்கும் படையினர், நேற்று முந்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வேனை மடக்கி சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ52 லட்சத்து 16 ஆயிரத்து 623 இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.விசாரணையில், டாஸ்மாக் கடைகளில் வசூலான பணத்தை தனியார் நிருவனம் சார்பில் கொண்டு சென்றதாக கூறினர். ஆனாலும், உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், சிறப்பு தாசில்தார் மலர்விழி தலைமையில் பெரும்புதூர் சுங்கச்சாவடி அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக காரில் வந்தவர்களிடம் ரூ81,200, தண்டலம் அருகில் செட்டிப்பேடு பகுதியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி தலையில் ரூ59,000 பணம் மறிமுதல் செய்யபட்டது. ஒரே நாள் இரவில் ரூ53 லட்சத்து 56 ஆயிரத்து 823 பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது….

Related posts

மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள்: சாத்தியக்கூறுகள் ஆய்வு

புழல் சிறையில் கைதிகளை சந்திப்பதற்கு புதிய நடைமுறை எதிர்த்து வழக்கு

ெசன்னை துறைமுகத்தில் இருந்து ₹35 கோடி மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்திய வழக்கில் மாநகர பஸ் டிரைவர் கைது