உயிர் காக்க வேண்டுமானால் தடுப்பூசி அவசியம்-மாதனூரில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

ஆம்பூர் : திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் பிடிஓ அலுவலக வளாகத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. இந்த விழாவிற்கு கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ராம் முன்னிலை வகித்தார். பிடிஓ துரை வரவேற்றார். இதில் தமிழக நீர் வளத்துறை, கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது:கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் விஞ்ஞானத்தால் தடுப்பூசி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டால் அந்த வியாதி வராது. வந்தாலும் சும்மா சென்று விடும். நானே அதற்கு உதாரணம். அந்த ஊசி மட்டும் நான் போடாமல் இருந்திருந்தால், இன்றைய நேரம் உங்களோடு நான் பேசிக் கொண்டிருப்பேனா என்பது சந்தேகம். எனவே, உயிர் காக்க வேண்டுமானால் ஊசி போட்டுகொள்வது ஒன்றே வழி. வந்த பிறகு அவற்றை போக்குகின்ற மருந்து 75 சதவீதம் மட்டுமே வேலை செய்கிறது. எனவே, கிராம மக்கள் அஞ்சாமல் இந்த ஊசியை போட்டுக் கொள்ள வேண்டும். சிலபேர் பயம் காட்டுவார்கள்.  முதல்வர் இந்த வைரஸ் தொற்றை அகற்ற இரவு பகல் பாராமல் தீவிர பணிகளை செய்து கொண்டிருக்கிறார். நோய் தடுப்பு, ஆக்சிஜன் வரவழைக்கும் பணிகளை 24 மணி நேரமும் ஒரு முதலமைச்சர் செயல்பட்டு கொண்டிருக்கிறார். ஓட்டு போட்ட மக்களுக்காக செயல்படுவதே உண்மையான அரசாங்கத்தின் லட்சணம். அதை நிறைவேற்றி வருகிறார் மு.க.ஸ்டாலின்.  மேலும், உயிரை பணயம் வைத்து நமது டாக்டர்களும், செவிலியர்களும் பணி புரிகிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைத்தார்.  எம்பிக்கள் கதிர் ஆனந்த், அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் தேவராஜி, நல்லதம்பி, வில்வநாதன், அமுலு விஜயன், எஸ்பி விஜயகுமார், மாதனூர் ஒன்றிய திமுக செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தம், மாதனூர் ஒன்றிய திமுக நிர்வாகிகள் ரவிக்குமார், சுப்பிரமணி, தெய்வநாயகம், ராதா ரவி, வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். …

Related posts

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம்

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

சிங்கப்பெருமாள் கோவில் அருகே மினி லாரி டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்து: சிதறிய மீன்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்