உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி வலியுறுத்தல் கள்ளக்குறிச்சி பகுதியில் சாராயம் குடித்து

திருவண்ணாமலை, ஜூன் 20: கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைக்கர் வேலுமணி வலியுறுத்தினார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சுவாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து, அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: பெருமாள் நகர் ராஜன் இல்ல திருமண விழா நடந்த அன்று நேரில் வர முடியாததால் இப்போது வந்தேன். இன்று (நேற்று) பிரதோஷம் என்பதால், அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தேன். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 13 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறை இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாதபடி தடுக்க வேண்டும். இவர் அவர் தெரிவித்தார். அப்போது, அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் ராஜன், ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்