உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது: இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 44,111 பேர் பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை..!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 853 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
* புதிதாக 44,111 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை  3,05,02,362 ஆக உயர்ந்தது.
* புதிதாக 738 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,01,050  ஆக உயர்ந்துள்ளது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 57,477 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,96,05,779  ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,95,533  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* நாட்டின் இதுவரை 34,46,11,291 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related posts

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

ஹத்ராஸில் சத்சங் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 122ஆக உயர்வு!

புதிய கிரிமினல் சட்டத்தில் 300 எப்ஐஆர்கள் ஒரே நாளில் பதிவு: டெல்லி போலீஸ் தகவல்