உபி.யில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 5 மாநில தேர்தல் திருவிழா இன்று முடிவுக்கு வருகிறது: ஆட்சியை பிடிப்பது யார்? 10ம் தேதி தெரியும்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் இன்று நடக்கும் இறுதி கட்ட வாக்குப்பதிவுடன், ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் திருவிழா முடிவுக்கு வருகிறது. இவற்றில் பதிவான வாக்குகள் வரும் 10ம் தேதி எண்ணப்படுகிறது. உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 8ம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, உபி.யில் 7 கட்டங்களாகவும், மணிப்பூர் 2 கட்டங்களாகவும், கோவா, உத்தரகாண்ட், ஜார்கண்ட் மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட், ஜார்கண்ட் மாநிலங்களில் ஏற்கனவே தேர்தல் முடிந்து விட்டது. இங்கு பதிவான வாக்குகள், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், உ.பியில் ஏற்கனிவே 6 கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. பிரதமர் மோடியின் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாரணாசி, அசம்கர், ஜான்பூர், காஜிப்பூர், சந்தோலி, மிர்சாபூர், பதோஹி மற்றும் சோன்பத்ரா உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், மொத்தம் 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.06 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அசம்பாவிதங்களை தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் வரும் 10ம் தேதி எண்ணப்படுகிறது. அன்றைய தினம், இந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பது தெரிந்துவிடும். * புதிய ஜனாதிபதியை தீர்மானிக்கும் தேர்தல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த சில மாதங்களில் முடிய உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் எம்எல்ஏ.க்கள் வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில், 50 சதவீதத்திற்கும் அதிகமாக  வாக்குகளை பெறுபவரே வெற்றி பெறுவார். இதனால், 5 மாநில தேர்தல் முடிவுகள் முதல்வர்களை தேர்ந்தெடுப்பது மட்டுமின்றி, நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதையும் தீர்மானிக்க உள்ளது. தற்போதைய நிலவரப்படி, பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 50 சதவீதத்திற்கு குறைவாகவே உள்ளது. இதனால், ஜனாதிபதி வேட்பாளரை ஒருமனதாக நிறுத்த, கூட்டணி கட்சிகளை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜ உள்ளது. 5 மாநில தேர்தல் முடிவுகள், மாநில கட்சிகளுக்கு சாதகமானால், ஜனாதிபதி தேர்தலில் பாஜ.வுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என தெரிகிறது….

Related posts

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

ஆந்திரா-தெலங்கானா முதல்வர்கள் சந்திப்பு; இருமாநில சொத்துக்கள் பிரிக்க விரைவில் குழு அமைப்பு