உபதலை, மசினகுடி, கடினமாலா ஊராட்சிகளில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்

 

ஊட்டி, ஜூலை 18: நீலகிரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாமானது 35 கிராம ஊராட்சிகள் வாரியாக 26 முகாம்கள் கடந்த 11ம் தேதி துவங்கி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாளை 19ம் தேதியன்று ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தூனேரி கிராம ஊராட்சி சமுதாய கூடத்திலும், குன்னூர் ஊராட்சி ஒன்றியம் உபதலை ஊராட்சியில் பெரிய உபதலை சமுதாய கூடத்திலும், கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மசினகுடி ஊராட்சியில் மசினகுடி குழந்தை இயேசு தேவாலயத்தில் நடக்கிறது. கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் கடினமாலா மற்றும் அரக்கோடு ஊராட்சியில் புனித அந்தோனியர் திருமண மண்டபம், பொம்மன் நகர், சோலூர்மட்டம் ஆகிய 4 இடங்களில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 15 அரசுதுறைகள் சார்ந்த 44 சேவைகள் பொதுமக்களுக்கு சென்றடையும் வண்ணம் சம்பந்தப்பட்ட துறைகளின் அனைத்தும் ஒருங்கிணைந்து சேவைகளும் வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்கள் மற்றும் உரிய ஆவணங்களுடன் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்