உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். உத்திரமேரூரில் அமைந்துள்ள ஸ்ரீ திரவுபதியம்மன் கோயிலில், கடந்த மாதம் 9ம்தேதி அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா தொடங்கிய நாள் முதல் தினமும் மகாபாரத சொற்பொழிவு மற்றும் தெருக்கூத்து நாடகம், ஜலக்கிரிடை, வில் வளைப்பு, அல்லி அர்சுணா, அர்ச்சுணன் தபசு, விராடபருவம், கிருஷ்ணன் தூது, அரவான் கள பலி, அபிமன்யூ சண்டை, கர்ண மோட்சம், பதினெட்டாம் போர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன.

இவ்விழாவின், முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் வதம் செய்யும் படுகளம் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதற்கான பிரம்மாண்டாமான துரியோதனன் போன்று மண்ணிலான உருவம் அமைக்கப்பட்டு, அதற்கு பல்வேறு வர்ணமிட்டு பிரம்மாண்டமாக காட்சியளித்தது. இதில், பீமன் வேடமிட்ட நாடக கலைஞர் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த துரியோதனன் தொடையில் அடிக்க, துரியோதனன் இறந்த காட்சியினை நாடக குழுவினர் தத்ரூபமாக நடித்து காட்டினர்.

இந்த, துரியோதனன் படுகள நிகழ்ச்சியினை காண உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். மாலை விரதமிருந்த பக்தர்கள் கோயிலில் பொங்கலிட்டும், தீக்குண்டத்தில் தீமித்தும் தங்களது நேத்திக்கடன்களை நிறைவேற்றினர்.

இரவு திரவுபதியம்மன், பஞ்சபாண்டவர்கள், கண்ணனுடன் விதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பக்தர்கள் தீபாதாரனை காட்டி சுவாமியை வழிபட்டனர். இரவு தெருக்கூத்துடன் நிகழ்ச்சி நடந்தது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை