உத்தரகாண்டில் கட்டாய மதமாற்றம்

உத்தரகாசி: உத்தரகாண்டில் நடந்த கிறிஸ்துமஸ் போது கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறி கிராம மக்கள் மோதலில் ஈடுபட்டனர். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டம் புரோலா கிராமத்தில் தேவ்துங்கில் கடந்த 23ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதாக அப்பகுதி மக்கள் புகார் கூறினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் நிகழ்ச்சியை நடத்தியவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறினார். கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்காக மத சுதந்திர சட்டத்தை உத்தரகாண்ட் அரசு கொண்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்….

Related posts

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு 18ம் தேதி வரை காவல்

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் குறித்து ராகுல் குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்