உதவி செயற்பொறியாளர் பணியிடம் நிரப்ப கோரி 22ம் தேதி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து பணி

சென்னை: உதவி செயற்பொறியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரி வருகிற 22ம் தேதி வரை பொறியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட உள்ளனர். மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட உதவி பொறியாளர்கள் தங்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரி கடந்த வாரம் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர்களை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறையில் 2000ம் ஆண்டில் உதவிப் பொறியாளர்களாக பணியில் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் படிப்படியாக 2014ல் உதவி செயற்பொறியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், 2007ம் ஆண்டில் பணியில் சேர்ந்த உதவிப் பொறியாளர்களாகிய நாங்கள் கடந்த 8 ஆண்டுகளாக, போதுமான காலிப்பணியிடங்கள் இருந்தும் பல்வேறு வழக்குகளை காரணம் காட்டி எங்களது பதவி உயர்வானது தள்ளிப்போடப்பட்டுக் கொண்டே வருகிறது. அரசு பணியாளர் விதி 47(1)ஐ பயன்படுத்தி  பதவி உயர்வினை வழங்கக்கூடாது என்ற வழக்கை தற்போது சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதால், அரசு பணியாளர் விதி 47(1)ஐ பயன்படுத்தி நீர்வள ஆதாரத்துறை உதவிப் பொறியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள துறை உதவிப் பொறியாளர் சங்கம் சார்பில் அவசரக் கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு வழங்கக்கோரி வரும் 22ம் தேதி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிவது என்றும், வரும் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், அனைத்து பொறியாளர் சங்க நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் நேற்று முன்தினம் முதல் மாநிலம் முழுவதும் பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான பொறியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை