உதயமார்த்தாண்டபுரம் ரயில்வே கேட் இன்று மூடல்

 

முத்துப்பேட்டை, ஜூலை 13: உதயமார்த்தாண்டபுரம் ரயில்வே கேட் இன்று மூடப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள லெவல் கிராசிங் எண் கேட் 57, ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக இன்று (13ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சாலைப் போக்குவரத்து மூடப்பட்டிருக்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு குறித்து ரயில்வே கேட்டு அருகே பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இப்பகுதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் முத்துப்பேட்டையிலிருந்து செல்பவர்கள் மன்னார்குடி சாலையிலிருந்து சித்தமல்லி சென்று புத்தகரம் வழியாக நாச்சிகுளம் கடைதெரு சென்று திருத்துறைப்பூண்டிக்கும், தொடர்ந்து செல்லும் பகுதிக்கும் அதேபோல் முத்துப்பேட்டையிலிருந்து தில்லைவிளாகம் வழியாக மேலபெருமழை, குன்னலூர் வழியாக திருத்துறைப்பூண்டி செல்லலாம். இதேபோல நாகப்பட்டினம் மற்றும் திருத்துறைப்பூண்டியிலிருந்து வருபவர்களும் இதே சாலையை மாற்று பாதையாக பயன்படுத்தி கொள்ளலாம் என முத்துப்பேட்டை ரயில்வே தாலுக்கா உபயோகிப்பாளர்கள் நல சங்க துணைச்செயலாளர் கிஷோர் தெரிவித்தார்.

Related posts

18 தீர்மானங்கள் நிறைவேற்றம் ஒன்றிய அரசுக்கு எதிராக கட்டுமான கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

திருவெறும்பூர் அருகே தலைவெட்டி அய்யனார் கோயில் ஆடி திருவிழா

உப்பிலியபுரம் அருகே விற்பனையாளரை தாக்கி ரேஷன் கடை சூறை