உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் புதிய குடிநீர் திட்ட பணிகள் தொடக்க விழா நிர்வாகிகள் பங்கேற்க இல.பத்மநாபன் அழைப்பு

 

திருப்பூர், பிப். 10: திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர், மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல. பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளுக்கு புதிய குடிநீர் திட்டம் மற்றும் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த 165 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் தொடக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் கழக இளைஞர் அணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய குடிநீர் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய பல்நோக்குகூடம் மற்றும் புதிய பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவற்றை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா பேசுகிறார். அதுபோது கழக முதன்மைச்செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கழக மகளிர் அணி துணைச்செயலாளர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

அதுசமயம் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை கழக நிர்வாகிகள், பாராளுமன்ற, சட்டமன்ற இந்நாள் முன்னாள் உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக இளைஞர் அணி நிர்வாகிகள், துணை அமைப்புகளின் இந்நாள்-முன்னாள் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கழக தோழர்களும் பங்குகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுகொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை