“உதயநிதி ஸ்டாலின் எனும் நான்….”: இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரானார்..!!

உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, அமைச்சர்கள், அதிகாரிகள், உதயநிதியின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பதவிப் பிரமாணம் முடிந்த பின்னர் அங்கிருந்து புறப்பட்ட உதயநிதி ஸ்டாலின், கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு தலைமைச் செயலகம் சென்று அவரது அறையில் அமைச்சராக பொறுப்பேற்றார்.

Related posts

நாடு முழுவதும் களைகட்டிய நவராத்திரி பண்டிகை கொண்டாட்டங்கள்!!

வானில் நெருப்பு வளையம்.. தென் அமெரிக்க நாடுகளில் தெரிந்த ‘ரிங் ஆஃப் ஃபயர்’..!!

பழிக்கு பழி வாங்கும் ஈரான் – இஸ்ரேல் : அல்லப்படும் சாமானிய மக்கள்!!