உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் பிலிம் சேம்பர் புதிய நிர்வாகிகள் தேர்வு

சென்னை: பிலிம் சேம்பர் என்கிற தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தது. இதில் தலைவராக ரவி கொட்டாரக்கரா, துணை தலைவர்களாக ஜி.பி.விஜயகுமார், டி.எஸ்.ராம் பிரசாத், கே.எஸ்.ராமகிருஷ்ணா, செயலாளர்களாக டி.ஏ.அருள்பதி, கிருஷ்ணா ரெட்டி, பொருளாளராக என்.ராமசாமி மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக எஸ்.தாணு, கே.பிரபாகரன், எஸ்.கதிரேசன், ஆர்.மாதேஷ், எம்.கபார், என்.விஜயமுரளி, மதுரை சாகுல் அமீது உள்பட 44 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். தேர்தல் அதிகாரியாக சி.கல்யாண் பணியாற்றினார். தேர்வான அனைவரும் பதவி ஏற்றுக்கொண்டனர். பிறகு நடந்த கூட்டத்தில், சங்க கட்டிடம் கட்ட அனுமதி பெற்றுத்தந்த எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பிலிம் சேம்பர் முன்னாள் தலைவர் காட்ரகட்ட பிரசாத், ஜாகுவார் தங்கம் உள்பட பல தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு