உண்ணாவிரதத்தை கைவிட்ட கைதி

சேலம், மே1: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன், துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கடந்த 2020ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அப்துல் சமீம், தவுபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான 2 பேரும் சேலம் மத்திய சிறையில் உயர்பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதிக்க கோரி நேற்றுமுன்தினம் கைதி அப்துல் சமீம் திடீரென உண்ணாவிரதம் இருந்தார். அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்றும் அதிகாரிகள் பேசினர். இதையடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்டு சாப்பிட்டார். இவரை வேறுசிறைக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து