உணவு பாதுகாப்பு தமிழகம் முதலிடம்

புதுடெல்லி: உணவு பாதுகாப்பு விஷயத்தில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு, ஒன்றிய அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சத்தான உணவை வழங்கும் வகையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில் 2018ம் ஆண்டு முதல் உணவு பாதுகாப்பு குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. உலக உணவுப் பாதுகாப்பு தினத்தையொட்டி, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் 4வது மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீட்டை ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார். இதில், 2021-22 ஆம் ஆண்டிற்கான தரவரிசையின் அடிப்படையில் பெரிய மாநிலங்களில், தமிழ்நாடு முதலிடத்திலும், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும் உள்ளன. சிறிய மாநிலங்களில் கோவா முதல் இடத்தைப் பிடித்தது. 2வது மற்றும் 3வது இடத்தில் மணிப்பூர் மற்றும் சிக்கிம் உள்ளது. யூனியன் பிரதேசங்களில், ஜம்மு காஷ்மீர், டெல்லி மற்றும் சண்டிகர் ஆகியவை முறையே 3 இடங்களை பிடித்துள்ளது. …

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்