உணவு கிடைக்காததால் 2 புலிகள் சாவு

சாம்ராஜ்நகர்: பண்டிபுரா புலிகள் சரணாலயப்பகுதிக்கு உட்பட்ட நுகு வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மூன்று புலி குட்டிகளில் இரண்டு புலிகுட்டிகள் இறந்ததையடுத்து மற்றொரு புலிகுட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  சாம்ராஜ்நகர் மாவட்டம் பண்டிபுரா புலிகள் சரணாலயப்பகுதியையொட்டிய எடியாலா அருகேயுள்ள நுகு வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் இரண்டு பெண், ஒரு ஆண் என்று மூன்று புலிக்குட்டிகளை கண்டனர். இதில் ஒரு பெண் புலி குட்டி இறந்து கிடந்த நிலையில் மற்ற இரண்டு புலி குட்டிகளை மீட்டு மைசூரு புலிகள் சரணாலயத்திற்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.இதில் சிகிச்சை பலனின்றி மற்றொரு பெண் புலி குட்டியும் இறந்தது. ஆண் புலி குட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உணவு கிடைக்காததால் புலி குட்டிகள் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ேமலும் புலிகுட்டிகளை விட்டு சென்ற தாய் புலியின் கால் தடயங்களை வைத்து தாய் புலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்….

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்