உடையார்பாளையம் பெண்கள் பள்ளியில் புதிய ஆசிரியர்களுக்கு உற்சாக வரவேற்பு

 

ஜெயங்கொண்டம், ஜூலை 26: உடையார்பாளையம் பெண்கள் பள்ளியில் புதிய ஆசிரியர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 100 சதவீத தேர்ச்சிக்கு பாடுபட தலைமை ஆசிரியர் முல்லைக்கொடி அறிவுறுத்தினார். உடையார்பாளையம் அரசுமகளிர் மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் பள்ளிக்கு புதிதாக வந்துள்ள ஆசிரியர்களை வரவேற்று வாழ்த்தப்பட்டது, நிகழ்வில் தலைமையாசிரியை முல்லைக்கொடி தலைமை வகித்தார்.

ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார். ஆசிரியர்கள் தமிழாசிரியை வளர்மதி, கணித ஆசிரியை அமுதா, வேதியல் ஆசிரியை பூசுந்தரி மூவரையும் தலைமையாசிரியை மாணவிகளிடம் அறிமுகம் செய்து வைத்து ,மாணவிகள் சென்ற ஆண்டு 10,11,12 ம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்றது போல் இந்த ஆண்டும் மாணவிகள் அனைவரும் ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களை திறம்படக்கற்று தேர்ச்சி பெறவேண்டும் என்றார்.

நிகழ்வில் ஆசிரியர்கள் சாந்தி, வனிதா, சங்கீதா, கவிதா,அருட்செல்வி,பாவை சங்கர், தமிழாசிரியர் இராமலிங்கம், இராஜசேகரன், மரகதம், உடற்கல்வி ஆசிரியர் ஷாயினஷா கலந்து கொண்டனர் முடிவில் தமிழரசி நன்றி கூறினார்.

Related posts

கோயில் கும்பாபிஷேகம்

வீட்டில் ரூ.1.85 லட்சம் நகை திருட்டு

தென்மண்டல டேக்வாண்டோ போட்டி 9 பதக்கங்கள் வென்ற மதுரை மாணவர்கள்