உடையார்பாளையம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 7 மாட்டு வண்டிகள் பறிமுதல்

 

ஜெயங்கொண்டம், மார்ச்20: உடையார்பாளையம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர். 7 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
உடையார்பாளையம் கோட்டாட்சியருக்கு வந்த ரகசிய தகவலின் படி வட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலரிடம் சவேரியார் பட்டி வழியாக 7 வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாகவும் வண்டியை நிறுத்தி அவர்கள் மீது வழக்கு பதிந்து காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். கிராம நிர்வாக அலுவலர் செந்தில் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் சென்று சவேரியார் பட்டியில் சென்று பார்த்தபோது 7 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி சென்றது தெரிய வந்தது அவர்களை மடக்கி நிறுத்தி உடையார் பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் மாட்டு வண்டிகளை ஒட்டி வந்தவர்கள் காடுவெட்டாங்குறிச்சி ராஜமாணிக்கம் (42), வானதிரையன்பட்டினம் ஐயப்பன் (23), வாத்திகுடிக்காடு வல்லரசு (21), ஒக்கநத்தம் குணசேகரன் (55), த. கீழவெளி அன்பழகன் (64), காங்கேயன் குறிச்சி வெங்கடாசலம் (58), தத்தனூர் நடராஜன்(65). ஆகிய 7 பேர் மீது உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து அவர்கள் ஓட்டி வந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி