உடையார்பாளையம் அரசு மகளிர் பள்ளியில் சுற்றுச்சூழல் வாரவிழா

ஜெயங்கொண்டம், ஜூன் 20: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசுமகளிர் மேல் நிலை பள்ளியில் நேற்று சுற்றுச்சூழல் வாரவிழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது . நிகழ்வில் பள்ளி தலைமையாசியை முல்லைக்கொடி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக உடையார்பாளையம் பேரூராட்சி தலைவர் மலர்விழிரஞ்சித்குமார் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பேரூராட்சி துணைத்தலைவர் அக்பர் அலி, ஆசிரியர்கள் மணிவண்ணன், தமிழரசி,தமிழாசிரியர் ராமலிங்கம், காமராஜ், பாவை செ சங்கர், உடற்கல்வி ஆசிரியர் ஷாயின்ஷா கலந்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி பசுமைப் படை, சுற்றுச்சூழல் பொறுப்பாளர்கள் ராஜசேகரன், மாரியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்