உடையார்பாளையம் அரசு மகளிர் பள்ளியில் கல்வி அலுவலர் ஆய்வு

 

ஜெயங்கொண்டம், பிப்.2: உடையார்பாளையம் அரசுமகளிர் மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் உத்தரவின்படி அரியலூர் மாவட்ட த்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளில் சுற்றுச்சூழல், சுகாதாரம், கழிவறைகள், சத்துணவு, விளையாட்டு மைதானம், பள்ளி நிர்வாகம் ஆய்வு செய்வதற்காக அரியலூர் மாவட்ட கல்வி அலுவலர் .ஜெயா மற்றும் அரியலூர்மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகளிசன்ஆய்வு செய்தனர்.

ஆய்வில் பள்ளி தேர்ச்சி விகிதம் பற்றியும், மாணவிகளிள்சுகாதாரம் பற்றியும், சத்துணவு தூய்மை, தரம், பற்றியும் ஆய்வு செய்தனர், மேலும் சதுரங்க விளையாட்டு போட்டியில் பள்ளி மாணவி மாநில அளவில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவி சிம்மவாகினி மற்றும் கலைதிருவிழாவில் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு, மாவட்டக் கல்வி அலுவலர் சான்றிதழ் பரிசு வழங்கி பாராட்டினார். ஆய்வில் தலைமையாசிரியர் முல்லைக்கொடி, ஆசிரியர்கள் சாந்தி, தமிழரசி, காவேரி, சங்கர் தமிழாசிரியர் ராமலிங்கம், உடற்கல்வி ஆசிரியர் ஷாயினஷா கலந்து கொண்டனர்.

 

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’