உடுமலை 4 வழிச்சாலையில் ஆபத்தான பள்ளத்தை சுற்றி தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

 

உடுமலை, செப்.11: பொள்ளாச்சி- திண்டுக்கல் இடையே நான்கு வழிப்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை உடுமலை நகருக்குள் நுழையாமல், புறநகர் வழித்தடத்தில் செல்கிறது. பொள்ளாச்சியில் இருந்து உடுமலை செல்லும் சாலையில், நகருக்கு வெளியே பைபாஸ் சாலையாகவும், உடுமலை நகருக்குள் செல்லும் வகையிலும் சாலை பிரிகிறது.

இந்த இடத்தில், சாலையோரம் பெரிய அளவில் பள்ளம் உள்ளது. சாலையோரம் தடுப்புச்சுவர் இல்லாத திறந்த வெளி கிணறு போல காட்சி அளிக்கும் இந்த பள்ளத்தின் அருகே மின்விளக்குகளும் இல்லை. எனவேஇரவு நேரங்களில் வாகனங்களில் இந்த பள்ளத்தில் விழும் வாய்ப்பு உள்ளது. எனவே, பள்ளத்தை சுற்றி தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’