உடுமலை 19வது வார்டில் சாக்கடை நிரம்பி வழிவதால் அவதி

உடுமலை: உடுமலை நகராட்சி 19வது வார்டு நாகராஜன் வீதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில், கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை நிரம்பி, தெருவோர சாக்கடைக்கு செல்கிறது. இதனால், அப்பகுதியில் வசிப்போர் கடும் அவதிப்படுகின்றனர். வீதியில் நடந்து செல்லவே முடியவில்லை. துர்நாற்றம் வீசுவதுடன், இரவில் கொசுத்தொல்லையும் பெருகி உள்ளது. இதுபற்றி நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக, பாதாள சாக்கடை அடைப்பை நீக்கி, கழிவுநீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

மாஞ்சோலை சுற்றுலாத் தலத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி

இளைஞர் தீக்குளிப்பு – 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்