உடுமலை ராதாகிருஷ்ணன் நீக்கம் என சமூக வலைதளங்களில் அவதூறு பதிவு: டிஜிபியிடம் அதிமுக புகார்

சென்னை: அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ஆர்.எம்.பாபு முருகவேல், உடுமலை ராதாகிருஷ்ணன் சார்பில் டிஜிபியிடம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சமூக வலைத்தளங்களில், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அதிமுக கொள்கைக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதன் காரணமாக அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அதிமுக அதிகாரப்பூர்வ கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையொப்பமிட்டதுபோல போலி கடிதத்தை தயாரித்து பதிவு செய்துள்ளனர். உண்மைக்கு புறம்பான செய்தியை உலவ விட்டுள்ளனர். இதை கண்டு முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை ராதாகிருஷ்ணன் அதிர்ச்சியடைந்தார். எனவே, இதுபோன்ற அவதூறான பதிவுகளை செய்த நபர்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் (153) அவதூறான செய்திகளை பரப்புதல் (499), போலியான ஆவணங்களை தயாரித்தல் (463)உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்