உடுமலை மாரியம்மன் கோயிலில் தேர்அலங்காரம் துவங்கியது

உடுமலை:உடுமலை மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா கடந்த 5ம்தேதி  மாலை நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. 12ம்தேதி இரவு 8.30 மணிக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. கம்பத்துக்கு தினசரி பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். 14ம்தேதி நள்ளிரவு 12 மணிக்கு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தன. 15ம்தேதி கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது. இதைத்தொடர்ந்து பூவோடு ஆரம்ப நிகழ்ச்சி நடந்தது. வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.19ம்தேதி பூவோடு நிறைவு, 20ம்தேதி அதிகாலை 4 மணிக்கு மாவிளக்கு, மாலை 4 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் 21ம்தேதி மாலை 4 மணிக்கு துவங்குகிறது. இதையொட்டி, தேர்அலங்காரம் செய்வதற்காக சிறப்பு பூஜை நடத்தி பந்தக்கால் நடப்பட்டது. தேரை சுத்தப்படுத்தி அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வர்ண்ணம் பூசுதல், வண்ண காகிதங்கள் ஓட்டும் பணி நடந்து வருகிறது.22ம்தேதி ஊஞ்சல் உற்சவம், பரிவேட்டையும், அன்று இரவு 10 மணிக்கு குட்டை திடலில் பிரமாண்டமான வாண வேடிக்கையும் நடைபெறும். 23ம்தேதி கொடியிறக்கம், மஞ்சள் நீராட்டுடன், புஷ்ப பல்லக்கு திருவீதி உலாவுடன் திருவிழா நிறைவடைகிறது.உள்ளூர் விடுமுறை அளிக்க கோரிக்கைஇரண்டு ஆண்டுக்கு பிறகு மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா நடைபெற இருப்பதால் தேரோட்டம் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 21ம் தேதி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 10,11 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மாதிரி திருப்புதல் தேர்வு, மாதிரி செய்முறை தேர்வுகள் நடைபெற்று வரும் வேளையில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ,மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது….

Related posts

“நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்” தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி.! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ஆலத்தூர் டாஸ்மாக் கடைக்குள் சென்று கலெக்டர் அதிரடி ஆய்வு

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் 8.6 முதல் 29.7 சதவீதம் மெத்தனால் கலப்பு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்