உடுமலை நகராட்சி சார்பில் வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

உடுமலை, டிச. 23:சமீபத்தில் பெய்த கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மு.பெ.சாமிநாதன் ஆகியோர் உத்தரவின்பேரில் உடுமலை நகராட்சி சார்பில், சுமார் 1000 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் 2 லாரிகளில் அனுப்பிவைக்கப்பட்டன.இதனை நகராட்சி தலைவர் மத்தீன், ஆணையர் லியோன் ஆகியோர் நேற்று வழியனுப்பி வைத்தனர். நிகழ்வில் நகரமன்ற கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி