உடுமலை அருகே வனத்தில் தீ

உடுமலை, ஏப். 19: கோடை துவங்கியுள்ளதால் கடும் வெயில் கொளுத்துகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் செடி, கொடிகள் காய்ந்து கடும் வறட்சி நிலவுகிறது.
வனத்தில் காட்டுத் தீ ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இருப்பினும் அவ்வப்போது தீப்பற்றிக்கொள்கிறது. இந்நிலையில், உடுமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட வல்லக்குண்டாபுரம், குழிப்பட்டி, ஈசல்திட்டு கிழக்கு, மேற்கு சுற்றுகளில் நேற்று முன்தினம் தீப்பிடித்தது. காய்ந்த செடிகளில் தீ பரவி வருகிறது. இதை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை