Friday, July 5, 2024
Home » உடல்நிலை பாதிப்புக்கு சிகிச்சை பெறும் சமந்தாவை சந்திக்கிறார் நாகார்ஜூனா

உடல்நிலை பாதிப்புக்கு சிகிச்சை பெறும் சமந்தாவை சந்திக்கிறார் நாகார்ஜூனா

by kannappan

ஐதராபாத்: தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜூனாவின் முதல் மனைவியின் மகன் நாகசைதன்யா, தெலுங்குப்  படங்களில் நடித்து வருகிறார். அவரும், சமந்தாவும் சில தெலுங்கு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தபோது காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் நடந்தது. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றனர். பரஸ்பரம் நாகசைதன்யாவும், சமந்தாவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டாமல், சினிமா மற்றும் வெப்தொடரில் நடிப்பதில் பிசியாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சமந்தா வெளியிட்ட பதிவில், தனக்கு மயோசிடிஸ் என்ற நோய் தாக்கியுள்ளதாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து திரையுலகினரும், ரசிகர்களும் சமந்தா நலம்பெற வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர். நாகார்ஜூனா, நடிகை அமலா தம்பதியின் மகனும், தெலுங்கு நடிகருமான அகில் வெளியிட்ட பதிவில், சமந்தா விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், இதுவரை நாகசைதன்யா தனது முன்னாள் மனைவியின் உடல்நிலை குறித்து விசாரிக்காமல் இருப்பதை திரையுலகினர் சுட்டிக் காட்டியுள்ளனர். இதையடுத்து சமந்தாவை நேரில் சந்தித்து அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து, நாகசைதன்யாவின் தந்தை நாகார்ஜூனா விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதை அவரது தரப்பு உறுதி செய்யவில்லை. தற்போது ‘யசோதா’, ‘சாகுந்தலம்’, ‘குஷி’, ‘அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ்’ ஆகிய படங்களில் சமந்தா நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு இதுபோல் உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, ஷங்கர் இயக்கிய ‘ஐ’, மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ ஆகிய படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது….

You may also like

Leave a Comment

fourteen − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi