உடல்நலக்குறைவால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி: விரைவில் குணமடைய தலைவர்கள் வாழ்த்து

புதுடெல்லி: உடல்நலக்குறைவால் காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் நரேந்திரமோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாண்புமிகு முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பூரண மற்றும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என தனித்து டிவிட்டர் பக்கத்தில்  கூறியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (89) கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணமானார். பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் நீண்ட காலமாக இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறது. கடந்த மே மாதம் இதய வலி காரணமாக சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். இந்நிலையில், மன்மோகன் சிங் நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் உடல் நலக்குறைவால் அவர் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை காங்கிரஸ் கட்சி மறுத்தது. காங்கிரஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. ’ என தெரிவித்தது….

Related posts

தமிழ்நாட்டுக்கு தினமும் 1 டிஎம்சி திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை: சித்தராமையா இன்று அவசர ஆலோசனை

“என்னை காண ஆதாருடன் வரவும்”- கங்கனா நிபந்தனை

போதைப்பொருள் வழக்கு: ஜாஃபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கியது டெல்லி போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்