உஜ்வாலா திட்டத்தில் வழங்கப்பட்ட 90 சதவீத சிலிண்டர்கள் பயன்படுத்தப்படவில்லை: பிரியங்கா காந்தி விமர்சனம்

புதுடெல்லி: ஒன்றிய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 90 சதவீத சிலிண்டர்கள் உபயோகப்படுத்த முடியாமல் கிடப்பதாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் உஜ்வாலா 2.0 திட்டம் தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தை வீடியோகான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் ஒன்றிய அரசு வழங்கிய சிலிண்டர்கள், விலை உயர்வு காரணமாக பயன்படுத்தமுடியாமல் கிடப்பதாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘‘உஜ்வாலா திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட 90 சதவீத சிலிண்டர்கள் பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன. பெண்கள் அடுப்பில் சமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏனென்றால் பாஜ தலைமையிலான ஒன்றிய அரசானது கடந்த 7 ஆண்டுகளில் சிலிண்டர் விலையை இருமடங்காக உயர்த்தியுள்ளது. மானியத்தை மிக சொற்ப தொகையாக குறைத்துவிட்டது. உஜ்வாலா திட்டம் குறித்து அரசு நேர்மையானதாக இருக்கும்பட்சத்தில் ஏழைகளுக்கு மானியத்தை வழங்க வேண்டும். பண வீக்கத்தை குறைக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்….

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு