உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பாதுகாப்பு அகாடமி தேர்வு பெண்களும் எழுத அனுமதி: ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனம்

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வை பெண்களும் எழுத அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்திய ராணுவத்திற்கு தேசிய பாதுகாப்பு அகாடமி (என்ஏடி), இந்தியன் மிலிட்டரி அகாடமி (ஐஎம்ஏ), ஆபிசர்ஸ் டிரைனிங் அகாடமி (ஓடிஏ) ஆகியவற்றின் மூலமாக வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில், ஐஎம்ஏ, ஓடிஏ நுழைவுத் தேர்வுகளில் இருபாலரும் பங்கேற்று தேர்வு எழுதலாம், தேசிய பாதுகாப்பு அகாடமி நுழைவுத் தேர்வில் ஆண்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் ஒன்றிய அரசு தரப்பில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ‘இது அரசின் கொள்கை முடிவு. இதில், நீதிமன்றம் தலையிட முடியாது’ என குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ஹிரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் தங்கள் இடைக்கால உத்தரவில் கூறியதாவது: ஓடிஏ, ஐஎம்ஏ மூலம் மட்டுமே ராணுவத்தில் பெண்கள் சேர கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ஏன் தேசிய பாதுகாப்பு அகாடமி மூலமாக சேர முடியாது? இருபாலர்கள் பயில்வதில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா? தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்பதுதான் அரசின் கொள்கை முடிவா? இந்த விஷயத்தில் அரசு பாலின பாகுபாடு காட்டும் போக்கில் மாற்றம் வேண்டும். எனவே, தேசிய பாதுகாப்பு அகாடமி நுழைவுத்தேர்வில் தகுதி வாய்ந்த பெண்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். இதுதொடர்பாக, யுபிஎஸ்இ புதிய அறிவிப்பாணை வெளியிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  இதன் மூலம், வரும் செப்டம்பர் 5ம் தேதி நடக்க உள்ள என்டிஏ நுழைவுத்தேர்வில் பெண்களும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது….

Related posts

ஆந்திராவில் ஆட்சி மாற்றம் எதிரொலி; சுரங்கத்துறை முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் தீ வைத்து எரிப்பு: கார் டிரைவர்கள் சிக்கினர்

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு 18ம் தேதி வரை காவல்