உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப்பின் 7வது முறையாக 136 அடியை கடந்தது முல்லைப் பெரியாறு அணை

கூடலூர்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப்பின், முல்லைப் பெரியாறு அணை 7வது முறையாக நேற்று 136 அடியை கடந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை விநாடிக்கு 2,831 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 6 மணி அளவில்  6,143 கனஅடியாக அதிகரித்தது. இதனால், நீர்மட்டம் 135.80 அடியானது. இரவு 7 மணியளவில் நீர்மட்டம் 136 அடியை கடந்தது. ரூல்கர்வ் அட்டவணைப்படி ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 10 வரை அணையில் 137.50 அடி வரை தண்ணீர் தேக்கமுடியும். தற்போது அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு வினாடிக்கு 1,866 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 6,046 மில்லியன் கன அடி. 2014ல் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்பு, 2014, 2015, 2018, 2019, 2020, 2021 மற்றும் நேற்று இரவு 7வது முறையாக நீர்மட்டம் 136 அடியை தாண்டியது குறிப்பிடத்தக்கது….

Related posts

அக்.3 முதல் 12ம் தேதி வரை மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் மீண்டும் துவங்கிய ரோப் கார் சேவை: 5 நாளில் 1,230 பக்தர்கள் பயணம்

நாகை மாவட்டம், தோப்புத்துறை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல்