‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் ஜனவரி 29ம் தேதி முதல் அடுத்தகட்ட பிரச்சாரத்தை மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தில் தேர்தல் பரப்புரை அனல்பறக்க நடந்து வருகிறது. அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி களமிறங்கியுள்ள நிலையில் திமுக சார்பில் தேர்தல் பரப்புரையில் உதயநிதி, கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மக்களை சந்தித்து வருகின்றனர். அத்துடன் திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் கிராம சபை என்ற பெயரில் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டும், அதிமுக அரசின் குறைகளையும், ஊழல்களையும் மக்கள் மத்தியில் முன்வைத்து வருகிறார். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அவர் கூறியதாவது; * தமிழ்நாட்டின் சமூக நீதியை உருகுலைத்து விட்டது அதிமுக அரசு.* தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் புதிய திட்டங்கள் இல்லை,* கொரோனா காலத்தில் மக்களை அரசு கைவிட்டுவிட்டது. * வரும் 29ம் தேதியில் இருந்து புதிய வியூகத்தில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.* 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் அனைத்து துறைகளிலும் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது.* தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வேன்.* ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் 29ம் தேதி முதல் புதிய பிரச்சாரம்.* திருவண்ணாமலையில் இருந்து ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரச்சாரத்தை தொடங்குகிறேன்.* மக்கள் தெரிவிக்கும் குறைகளை பெற்றுக்கொண்டு ஒப்புகை சீட்டு வழங்கப்படும்.* மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதே எனது முதல் பணி என உறுதி அளிக்கிறேன்.* ஆட்சிக்கு வந்ததும் முதல் 100 நாட்களில் போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படும்.* www.stalinani.com என்ற இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம்.* மக்கள் பிரச்சனைகளை 9171091710 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்