உக்ரைன் – ரஷ்யா போர்: தங்கம் விலை ஒரே நாளில் ரூ.864 உயர்வு; பங்கு சந்தைகள் சரிவு; பெட்ரோல், சிலிண்டர் விலையும் உயரும் அபாயம்!!

டெல்லி : உக்ரைன் மீது ரஷ்யா போரினை தொடங்கியுள்ளதால், தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, இந்திய பங்கு சந்தைகள் சரிவு கண்டுள்ளன. ஐ,நா. பாதுகாப்பு கவுன்சிலின் அறிவுரைகளையும் மீறி உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷிய அதிபர் புதின் இன்று காலை உத்தரவிட்டார். இதையடுத்து உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்கில் ரஷிய படைகள் குண்டு மழை பொழிய தொடங்கின. ஒடேசா, கார்க்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷிய ராணுவம் ஏவுகணை மூலம் தாக்கி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,045 புள்ளிகள் மேல் சரிந்து 55,186 புள்ளிகளில் வணிகமாகிறது. சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களும் சரிவை கண்டுள்ளன. டெக் மஹிந்திரா 4.30%மும் விப்ரோ, எஸ்பிஐ, டாடா ஸ்டீல், இண்டஸ் இந்த் வங்கி, பாரதி ஏர்டெல் ஆகியவை 3% மேலும் சரிவை கண்டுள்ளது. மேலும் நிஃப்டி 600 புள்ளிகளுக்கு மேலும் சரிந்து வர்த்தகம் ஆகிறது. பங்குச்சந்தைகள் சரிவால் முதலீட்டாளர்களுக்கு சில லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. போர் காரணமாக முதலீட்டாளர்கள் அச்சமடைந்து தங்கள் முதலீடுகளை வெளியே எடுக்கின்றனர். இதே போல் ஆபரணத் தங்கம் விலை இன்று மட்டும் சவரனுக்கு சென்னையில் ரூ.864 அதிகரித்து ரூ.38,616க்கு விற்பனையாகிறது. மேலும், ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலராக உயர்ந்தது.கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததை அடுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை தொட்டுள்ளது. மேலும் ரஷிய – உக்ரைன் போரால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மற்றும் கோதுமை விலையும் உயரும் என்று கூறப்படுகிறது. …

Related posts

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு