உக்ரைன் ரஷ்யா போர் எதிரொலி: உதிரி பாகங்கள் உற்பத்தி குறைவால் கார்களின் விலை உயர்வு

ரஷ்யா: உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக கார்களின் உற்பத்தி பாதித்து அவற்றின் விலை உயரும் நிலை  ஏற்பட்டுள்ளது. ஓராண்டுக்கு மேலாக கம்ப்யூட்டர் சிப்கள் மற்றும் முக்கிய பாகங்களுக்கு கடும் தட்டுப்பாடு சர்வதேச ஆட்டோ மொபைல் துறை  திணறிக்கொண்டு இருக்கிறது. இதனால் பயன்படுத்திய கார்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஆட்டோ மொபைல் துறையின் புதிய தடையை உருவாக்கியது. எலக்ட்ரானிக்  ஓயரிங்களுக்கு உக்ரனை கார் நிறுவனங்கள் அதிக நம்பியுள்ள நிலையில் போர் காரணமாக இவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.எலக்ட்ரிக் வாகனக பேட்டரிகள் தயாரிப்புகளுக்கு தேவைப்படும் பிளாட்டினம் மற்றும் பல்லாடியம் போன்ற மூலப் பொருட்கள் ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதி  செய்யப்படும் நிலையில் தற்போது போர் காரணமாக பல்லாடியம் பிளாட்டினம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக BMW நிறுவனம் ஜெர்மனியில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளில் தனது உற்பத்தியை நிறுத்தி வைக்கபட்டடுள்ளது. மெர்சிடிஸ் நிறுவனம் தனது தொழிற்சாலை பனியின் விரைவு தன்மையை குறைத்துள்ளது. போக்ஸ், வேகன் நிறுவனம் உதிரி பாகங்களுக்கான மாற்று வழியை கண்டுபிடிக்கும் வரை அந்நிறுவனம் தயாரிப்பை நிறுத்தலாம் என தெரிவித்தனர்….

Related posts

நஸ்ரல்லாவுக்கு பின் தலைவர் பதவியை ஏற்க இருந்த ஹஷேம் சபேதீன் இஸ்ரேல் குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தலைவர் பலி: லெபனானில் பதற்றம்

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு