உக்ரைன்- ரஷ்யா போர் எதிரொலி: டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஒரே நாளில் ரூ.1.09 காசுகள் சரிவு

டெல்லி: டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஒரே நாளில் ரூ.1.09 காசுகள் சரிவை கண்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவை கண்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 109 காசுகள் சரிந்து ரூ.75.70 ஆக குறைந்தது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செஸ் 2,702 புள்ளிகள் குறைந்து 54,530 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 815 புள்ளிகள் குறைந்து 16,248 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும், உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருவதால் உலகம் முழுவதும் பங்குசந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து சவரன் ரூ.54,560-க்கு விற்பனை