உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக தாக்குதல்: தலைநகரை தாக்‍க 65 கி.மீட்டருக்கு அணிவகுத்து நிற்கும் ரஷ்ய ராணுவ வாகனங்கள்

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா 6 ஆம் நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தலைநகர் கீவ்வின் வடக்கே ரஷ்யாவின் ராணுவ வாகனங்கள் 65 கிலோ மீட்டருக்கு அணிவகுத்து நிற்கும் செயற்கைகோள் படங்கள் வெளியாகி உள்ளன. போர் பீதியால் உக்ரைனில் இருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட இதுவரை 5 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி இருப்பதாக ஐ.நா.சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது. போர் தீவிரமடையும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனில் இருந்து வெளியேறுவோர் போலாந்து, ஹங்கேரி, ஸ்லோவேகியா, ருமேனியா, மால்டோவா ஆகிய நாடுகளின் எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக பட்சமாக போலாந்து நாட்டின் எல்லையில் சுமார் 3 லட்சம் பேர் குவிந்துள்ளனர். இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 6-வது நாளாக தீவிரமடைந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளிலும் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் சில குடியிருப்புகள் தீக்கிரையாகி உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதனிடையே உக்ரைன் தலைநகர் கீவ்வை தாக்க ரஷ்யாவின் ராணுவ வாகனங்கள் 65 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.              …

Related posts

பாலஸ்தீன போராட்டம் நடத்த முயன்ற இந்திய பெண் கேரளா செல்ல சிங்கப்பூர் நீதிமன்றம் அனுமதி

பாக்.கில் பெட்ரோல் விலை உயர்வு

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சிறையில் இருந்து 18 கைதிகள் தப்பி ஓட்டம்